மிர்ச்சி சிவாவின் அடுத்த என்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான டீசர் இதோ!

மிர்ச்சி சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் பட டீசர்,Mirchi shiva in single shankarum smartphone simranum movie teaser | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் மிர்ச்சி சிவா ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா என அன்போடு அழைக்கப்படுகிறார். தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து கலகலப்பான என்டர்டெய்னிங் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் சிவா, ஆரம்பக் கட்டத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இருப்பினும் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவா, அவரை தவிர யாருமே அந்த படத்திற்கு சரியான தேர்வாக இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பின்னர் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் விமலுடன் இணைந்து கலகலப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தில்லு முல்லு படத்தின் ரீமேக், இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் முதல் படமான வணக்கம் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் வரிசையாக நடித்து அசத்தினார் சிவா.

மேலும் சென்னை 600028 2, கலகலப்பு 2, தமிழ் படம் 2 என தனது திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களிலும் நடித்து அசத்திய சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. அதேபோல் 1970களில் வெளிவந்து மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள காசேதான் கடவுளடா, யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்துள்ள சலூன், ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படம். இயக்குனர் விக்னேஷ் ஷா.PN இயக்கத்தில் மிர்சி சிவா உடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அஞ்சுக்குரியன் மற்றும் மா கா பா ஆனந்த ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். LARK ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்திற்கு ஆர்தர் A வில்சன் ஒளிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.  

முன்னதாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது.  கலக்கலான காமெடி சரவெடியாக வெளிவந்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. மிர்ச்சி சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் கலகலப்பான டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் - லியோ பட நடிகர் இணைந்து நடித்த புதிய படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் - லியோ பட நடிகர் இணைந்து நடித்த புதிய படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!