தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட ப்ளடி ஸ்வீட் மேக்கிங் வீடியோ,thalapathy vijay in leo movie bloody sweet new video from anirudh | Galatta

இன்றைய தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளராகவும் தென்னிந்திய சினிமாவின் ராக்ஸ்டாராகவும் வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த 2022 ஆம் ஆண்டில்  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான தளபதி விஜயின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் தனது இசையால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும்(2023) இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட்டில் தயாராகும் ஜவான், ஜூனியர் என்டிஆர்-ன் 30-வது படமாக தெலுங்கில் தயாராகும் NTR30, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ராக்ஸ்டார் அனிருத் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க தயாராகும் லியோ படத்திற்கும் இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி லியோ திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. தளபதி விஜயின் ஸ்டைலான லுக்கில் வெளிவந்த அந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்ற ப்ளடி ஸ்வீட் எனும் பாடல் அனைவரது கவனத்தையும் உடனடியாக ஈர்த்தது.

இந்நிலையில் அந்த ப்ளடி ஸ்வீட் பாடலில் பணியாற்றிய இசை கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து, ப்ளடி ஸ்வீட் பாடலை கொண்டாடிய "அனைவரின் அன்பிற்கும் எப்போதும் நன்றி" என நன்றி தெரிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். பாடலைப் பாடிய சித்தார்த் பஸ்ரூர், கிட்டார் இசைக் கலைஞர் கேபா, ஆகியோருடன் அனிருத் பியானோ வாசிக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அனிருத்தின் லியோ பட ப்ளடி ஸ்வீட் ஸ்பெஷல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

#BloodySweet 🍫🔪

Thanks for all your love as always 🙏🏻

👏 to my music team 🏆@siddharthbasrur @kebajer @shashankvijayy @Le_Sajbro @vinhariharan #Srini @LucaPretolesi

🎬 @GndShyam

Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth pic.twitter.com/iTqqfxmqCT

— Anirudh Ravichander (@anirudhofficial) February 9, 2023

பரபரக்கும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படப்பிடிப்பு... ட்ரெண்டாகும் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

பரபரக்கும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படப்பிடிப்பு... ட்ரெண்டாகும் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்... முதல் பாடல் குறித்த அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்... முதல் பாடல் குறித்த அசத்தலான அறிவிப்பு இதோ!

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ
சினிமா

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ