பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, AK62 வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸின் அடுத்த படைப்பு!- இயக்குனர் யார் தெரியுமா? விவரம் உள்ளே

டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா,lyca productions signed their next project with dada movie director | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தொடர்ந்து தரமான படைப்புகளையும் பிரம்மாண்டமான படைப்புகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வரும் நிறுவனம் லைகா ப்ரொடக்ஷன்ஸ். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் சிவகார்த்திகேயனின் டான், யோகி பாபுவின் பன்னிக்குட்டி, இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் 1, அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து நடித்த பட்டத்து அரசன், வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், த்ரிஷாவின் ராங்கி ஆகிய திரைப்படங்கள் லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றன.

இதனைத் தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டிலும் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கின்றன. அதில் முதலாவதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என நட்சத்திர பட்டாளமே நடிக்க புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக பொன்னியின் செல்வன் பாகம் 2 (PS-2)  திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ஆல் டைம் ரெக்கார்ட்டாக 500 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இரண்டாவது பாகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தயாராகி வருகிறது. தடைகள் நீங்கி மும்மரமாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அஜித்குமார் தனது 62 ஆவது திரைப்படமாக நடிக்கும் AK62 திரைப்படத்தையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மேலும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க கிரிக்கெட் மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது. இந்த லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கிய கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை, பிக் பாஸ் கவின் நடிப்பில் நேற்று பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டாடா திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ்.K.பாபு இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கணேஷ்.K.பாபு தனது அடுத்த திரைப்படத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

We are extremely elated to announce that we have signed ✍🏻 our next project with the young & happening @ganeshkbabu ✨ the director of #DADA 🎬 pic.twitter.com/L81VXeGoHS

— Lyca Productions (@LycaProductions) February 10, 2023

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே
சினிமா

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!
சினிமா

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!