உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘டாடா’ படக்குழுவினர்.. நெகிழ்ச்சியில் கவின்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

உலக நாயகனை சந்தித்த டாடா படக்குழுவினர் - Kavin meets Ulaganayagan kamal haasan | Galatta

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியானால் அந்த திரைப்பட குழவினரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லும் வழக்கத்தை உலகநாயகன் கமல் ஹாசன் பல ஆண்டு காலமாக செய்து வருகிறார் கமல் ஹாசனை சந்தித்தாலே போதும் என்று இன்றும் பல திரைபிரபலங்கள் ஏங்கும் நிலையில்  கமல் ஹாசனே அழைத்து வாழ்த்துவதை எதிர்பார்த்து பலர் இன்றும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடித்து இயக்குனர் கனேஷ் கே  பாபு இயக்கிய திரைப்படம் டாடா நேற்று தமிழகமெங்கும் வெளியானது. படத்தின் டிரைலர், பாடல் தனி எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் பல இடங்களில் டாடா படம் ஹவுஸ் புல் காட்சிகளுடன் தொடங்கியது. எதிர்பாத்தபடி டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பல இடங்களில் பெற்று வருகிறது.

action king arjun give solid news about thalapathy vijay lokesh kanagaraj leo movie

இந்நிலையில் படக்குழுவினர் உலகநாயகன் கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் டாடா படத்தின் கதாநாயகன் கவின் கமல் ஹாசனுடன் உள்ள புகைப்படைத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன்  “இன்று கோவிலுக்கு சென்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Went to temple today :) @ikamalhaasan sir 🙏🏼🙏🏼🙏🏼♥️ pic.twitter.com/Oz6A62Wp4s

— Kavin (@Kavin_m_0431) February 11, 2023

இதனையடுத்து ரசிகர்கள் அந்த பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். கவின் இதற்கு முன்பு உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் 3 வது சீசன்  நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்றவர். சிறப்பாக விளையாடி ரசிகர்களின் அபிமான்யத்தை சம்பாதித்தவர். மேலும் கமல் ஹாசனுடன் அவ்வபோது பாராட்டுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

action king arjun give solid news about thalapathy vijay lokesh kanagaraj leo movieகல்லூரி வாலிபன் தகப்பனாக சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் எமோஷனல் கதையம்சத்துடன் வெளியாகவிருக்கும் திரைப்படமான டாடா திரைப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். . ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார் எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்த உரிமையை பெற்றுள்ளது  உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம், பீஸ்ட் தொடர்ந்து Mocobot பயன்படுத்திய சிவகார்த்திகேயனின் மாவீரன்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து Special glimpse இதோ..
சினிமா

விக்ரம், பீஸ்ட் தொடர்ந்து Mocobot பயன்படுத்திய சிவகார்த்திகேயனின் மாவீரன்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து Special glimpse இதோ..

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..
சினிமா

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.. மிரட்டலான முதல் காட்சியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.. மிரட்டலான முதல் காட்சியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் வீடியோ இதோ..