தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சிறந்த நடிகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் பலவிதமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதிலும் தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சீயான் விக்ரம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக பிரமிப்பின் உச்சமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் உடன் இணைந்துள்ளார் விக்ரம். தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான திரைப்படத்தில் தற்போது விகரம் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும் தங்கல் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோரோடு தான் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை நடிகை பார்வதி தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)