உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் பா ரஞ்சித் சந்திப்பு! காரணம் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் பா ரஞ்சித் சந்திப்பு,pa ranjith met ulaganayagan kamal haasan for neelam bookstore inauguration | Galatta

தமிழ் சினிமாவே பெருமை கொள்ளும் ஒப்பற்ற கலைஞனாகவும் இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையாகவும் திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாட ஆல் டைம் ரெகார்டாக 500 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது.

அடுத்ததாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படம் LCUல் இடம்பெறும் பட்சத்தில் லியோ திரைப்படத்தில் விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதே போல் இயக்குனர் வெற்றிமாறன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கும் கமல்ஹாசன் அவர்கள் அப்படத்திற்கான திரைக்கதையும் எழுத உள்ளார்.

இதனிடையே நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் உலகநாயகன் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த KH234 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பை விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் அவர்களே அறிவித்திருந்தார். இத்திரைப்படத்திற்கான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

இயக்குனராக தனது ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை மிகவும் அழுத்தமாக பேசி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், திரைப்படங்களை தாண்டியும் இது குறித்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல நற்செயல்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை பா.ரஞ்சித் அவர்கள் தொடங்கி இருக்கிறார். சென்னையின் எக்மோர் பகுதியில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையம் அமைய இருக்கிறது. இந்த விற்பனை நிலையத்தை திறந்து வைப்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்றுக் கொண்ட உலகநாயகன் கமலஹாசன் நாளை காலை 11:30 மணி அளவில் நடைபெறும் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது உலகநாயகனை சந்தித்த சந்திப்பின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். மேலும் நீலம் பண்பாட்டு மைய புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழா அழைப்பிதழையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
 

Please Join us in the launch of our Neelam Bookstore tomorrow ( 12.02.2023) Thank you @ikamalhaasan sir for accepting the invite for the event! pic.twitter.com/jDo1zECbXC

— pa.ranjith (@beemji) February 11, 2023

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட பக்கா மாஸான ப்ளடி ஸ்வீட்... ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட புது வீடியோ இதோ!

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே
சினிமா

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே