மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் - லியோ பட நடிகர் இணைந்து நடித்த புதிய படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

மாளவிகா மோகனனின் கிறிஸ்டி பட ட்ரெய்லர் வெளியீடு,malavika mohanan mathew thomas in christy movie trailer | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பட்டம் போலே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக களமிறங்கிய மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸான மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக 1800களின் காலகட்டத்தை மையப்படுத்தி கே ஜி எஃப் கதை களத்தை கொண்டு 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளிவர தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் சித்தான்த் சத்துர்வேதி கதாநாயகனாக நடித்து வரும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனா நடித்து வருகிறார். இதனிடையே ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா மோகனன் கிறிஸ்டி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் இந்த கிறிஸ்டி திரைப்படத்தில் மாளவிகா மோகனுடன் இணைந்து கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆல்வின் ஹென்றி கதை எழுதி இயக்கும் கிறிஸ்டி திரைப்படத்திற்கு பென்யாமின் மற்றும் GR.இந்துகோபன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். ராக்கி மௌண்டைன் சினிமாஸ் சார்பில் சஜை செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் இணைந்து தயாரித்துள்ள கிறிஸ்டி திரைப்படத்திற்கு ஆனந்த் C சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஜித் ராகவ் கலை இயக்கத்தில் மனு ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள கிறிஸ்டி திரைப்படத்திற்கு "96" படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

சென்ட்ரல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் கிறிஸ்டி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் கொள்ளும் இளைஞனை மையமாக வைத்து தயாராகி இருக்கும் இந்த கிறிஸ்டி திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளிவந்த கிறிஸ்டி திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது கிறிஸ்டி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அசத்தலான அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே
சினிமா

“வெற்றிமாறன் - பா.ரஞ்சித்... அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!
சினிமா

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

பரபரக்கும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படப்பிடிப்பு... ட்ரெண்டாகும் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

பரபரக்கும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படப்பிடிப்பு... ட்ரெண்டாகும் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!