மீண்டும் Beast mode ல் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமான workout.. வைரல் வீடியோ இதோ..

சூர்யா 42 படத்திற்காக உடலை மெருகேற்றும் சூர்யா - Actor suriya into beast mode Viral exercise video | Galatta

சூர்யாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் மிகப்பெரிய வெற்றி திரைப்படமான 'சூரரைப் போற்று' படத்தின் மூலம் துவங்கியது. வசூல் ஒருபுறம் விருது ஒரு புறம் என்று இருக்க அதனை தொடர்ந்து 'ஜெய்பீம்' திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான சூர்யா நடிப்பு என்று வந்து விட்டால் தன்னையே அர்பணித்து அதற்கான உழைப்பை கொடுத்து விடுவார். அதற்காகவே அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் சாம்ராஜ்யமே உள்ளது. சூர்யா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் எஸ் தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான ஒத்திகையும் சமீபத்தில் நடைபெற்றது. இதனிடையே சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படத்தில் ஒப்பந்தமானார், அதற்கான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. வரலாற்று பிண்ணனியில் நிகழ்காலம் கலந்து உருவாகவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்கிறார். பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மிக பிரம்மாண்டமான செட்டுகளில் சூர்யா 42 திரைப்படம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சூர்யா தனது உடலை சூர்யா 42 படத்திற்காக மேலும் மெருகேற்ற உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். வெறித்தனமாக workout செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

உங்க உடம்ப ரெடி பண்ணுங்க... எல்லா வலியும் போயிடும் 🔥@Suriya_offl #suriya #suriya42 #vaadivaasal #gym #workout #fitness #actorsuriya #galatta pic.twitter.com/aDofCZc6KU

— Galatta Media (@galattadotcom) February 11, 2023

உடல் கட்டுகோப்பாய் வைத்து அதாவது சிக்ஸ் பேக் போன்ற டிரெண்டிங்கை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சூர்யா.. வாரணம் ஆயிரம் படம் தொடங்கி இன்று வரை உடல் அமைப்பை சீராக வைத்து படத்திற்காக கட்டுகோப்பாய் வைத்து திரையில் தோன்றி மாஸ் கட்டி வருகிறார். சமீபத்தில் அவரது கட்டுமஸ்தான உடல் எந்தவொரு திரைப்படத்திலும் பெரிதளவு காட்சிபடுத்தவில்லை. தற்போது சூர்யா 42 படத்திற்காக உடல் அமைப்பை மேருகேற்றுவதால் மாஸான சிக்ஸ் பேக் காட்சி இந்த படத்தில் இடம் பெறாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dada kavin and team meets kamal haasan and gets blessings

பா ரஞ்சித் படத்திற்காக அதிரடியில் இறங்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா – அட்டகாசமான தங்கலான் பட அப்டேட் உள்ளே..
சினிமா

பா ரஞ்சித் படத்திற்காக அதிரடியில் இறங்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா – அட்டகாசமான தங்கலான் பட அப்டேட் உள்ளே..

விக்ரம், பீஸ்ட் தொடர்ந்து Mocobot பயன்படுத்திய சிவகார்த்திகேயனின் மாவீரன்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து Special glimpse இதோ..
சினிமா

விக்ரம், பீஸ்ட் தொடர்ந்து Mocobot பயன்படுத்திய சிவகார்த்திகேயனின் மாவீரன்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து Special glimpse இதோ..

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..
சினிமா

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..