கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக்கோலம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்தது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் தனது எஸ்தல் எண்டர்டெயினர் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக எஸ்தர் எண்டர்டெய்னர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாசுவின் கர்ப்பிணிகள்.

மலையாளத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த ஸச்சாரியாயுடே கர்ப்பிணிகள் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் வாசுவின் கர்ப்பிணிகள் திரைப்படத்தில் "நீயா நானா" கோபிநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் இணைந்து அனிகா சுரேந்தர், சீதா வனிதா விஜயகுமார் லேனா குமார் அபிஷேக் சச்சின் மற்றும் சுஜா வருணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பென்சில் படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு மோகன் சித்தாரா அமைத்துள்ளார். இந்நிலையில் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…