தமிழ் திரை உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சூர்யா ஓரிரு தினங்களுக்கு முன்பு உலகநாயகன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். விக்ரம் படத்தின் இறுதியில் வெறும் 3 நிமிடம் மட்டுமே இருந்த அந்த காட்சியில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் விரட்டி உள்ள சூர்யாவின் கதாபாத்திரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முன்னதாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்கவுள்ளார். இதனிடையே தனது ரசிகரின் மறைவால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள நடிகர் சூர்யா அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகரின் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,
என் மீது பேரன்பும்  உரிமையும் கொண்ட தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன் உடல்நலக் குறைவால்  நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.  ஏற்க இயலாத அவரின் இழப்பு மீளா துயரத்தில் ஆழ்த்துகிறது. 
அவருடைய குடும்பத்தினரின் துயரில் ஒரு சகோதரனாய் பங்கெடுக்கிறேன்!!

என தெரிவித்துள்ளார். சூர்யாவின் அந்த எமோஷனலான பதிவு இதோ…