மாடலிங்கில் கலக்கி வந்த பவித்ரா விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனையடுத்து தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும் களமிறங்கியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகமானார்.  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளிவந்த நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் நடிகையாக அறிமுகமாகும் நடிகை பவித்ரா, நடிகர் ஷேன் நிகம் உடன் இணைந்து உல்லாசம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஜீவன் ஜோஜோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் உல்லாசம் திரைப்படத்தை கைத்தமட்டோம் ப்ரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஸ்வரூப் ஃபிலிப் ஒளிப்பதிவில், ஜான் குட்டி படத்தொகுப்பு செய்துள்ள உல்லாசம் படத்திற்கு கோபி சுந்தர் பின்னணி இசை சேர்க்க, ஷான் ரஹ்மான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் உல்லாசம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த ட்ரைலர் இதோ…