தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரங்கா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ரங்கா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள வட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த வரிசையில் சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் மாயோன். 

டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள மாயோன் படத்தை, இயக்குனர் N.கிஷோர் இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாயோன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் இதோ…