கதாநாயகன், வில்லன், மிக முக்கிய வேடங்கள் என எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கே உரித்தான பாணியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் இதயங்களை கொள்ளை கொள்ளும் நடிகர் அரவிந்த்சுவாமி, கடைசியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமாக வெளிவந்த தலைவி திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்தார்.

தொடர்ந்து அரவிந்த்சுவாமி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக அரவிந்த்சுவாமி நடித்துள்ள நரகாசூரன் திரைப்படம் நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. மேலும் ரெண்டகம், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்திருக்கும் கள்ளபார்ட் திரைப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மூவிங் ஃப்ரேம்ஸ் தயாரித்துள்ள கள்ளபார்ட் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த கள்ளபார்ட் படத்திற்கு தற்போது சென்சாரில் U/A வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவிந்த் சுவாமியின் கள்ளபார்ட் திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் சற்று முன்பு வெளியானது. கள்ளபார்ட் திரைப்படத்தின் விறுவிறுப்பான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.