உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இயக்கிய ஃபேன் பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தடுத்த அட்டகாசமான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், ஹலிதா ஷமீம் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தற்போது OTT மீது ரசிகர்கள் அதிக ஈர்ப்பு கொண்டுள்ள இந்த சூழ்நிலை குறித்து கேட்டபோது, “இது மக்களுடைய தேடல் தான். ஒரு படம் பார்க்கப் போகும்போது என்ன புதிதாக பார்க்க போகிறோம் என்கிற தேடல் தான். உறியடி பார்க்கும் பொழுது, 2016ல் நான் அந்த திரைப்படத்தின் ரசிகன். அப்போது வரைக்கும் அந்த விஜயகுமார் யார் என்று எனக்கு தெரியாது. அதற்கு முன்பு நான் அவரை பார்த்ததே கிடையாது. அதன் பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம். ஆனால் அங்கே என்னை கொண்டு சென்றது அந்தப் படத்தின் டிரைலர் தான். அதேபோல் மாநகரம் வெளியாகும் போதும் இதே தான் நடந்தது. இது எல்லாமே ரசிகர்கள் முடிவு செய்வது தான். அவர்கள் படம் பார்க்கும் விதம் தற்போது மாறி வருவதனால் இப்படித்தான் இருக்கிறது. ஊரடங்குக்கு பிறகு OTT அதிகம் பரவி இருக்கிறது. நாம் எவ்வளவு செய்தாலும் அதை தாண்டியும் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அது வெப் சீரிஸோ படங்களோ எதுவாக இருந்தாலும் எல்லா OTT தளத்திலும் நிறைய பார்த்து விடுகிறார்கள். எனவே தியேட்டருக்கு சென்று வெறும் பிரம்மாண்டத்தை பார்க்க வேண்டும் என்பது மட்டும் அவசியமல்ல. அதைத் தாண்டி நட்சத்திரங்கள் சிறந்த நடிகர்களாக மாறி நடிப்பதை, புதிதாக வேறு என்ன கிடைத்த விட போகிறது என்ற தேடலில், பிரம்மாண்டங்களை தாண்டி வேறு என்ன தியேட்டரில் இருக்கிறது என்பதற்காக ரசிகர்கள் மிகவும் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொருத்து தான் எதை தியேட்டரில் பார்க்க வேண்டும். எதை OTT தளத்தில் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இந்த குழப்பம் எனக்குமே இருந்தது அந்தகாரம் படம் வந்தபோது இது தியேட்டருக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அது OTT தளத்திலும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. எனவே ரசிகர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே பார்ப்பதற்காக திரையரங்குகளுக்கு செல்ல போவது இல்லை. ஸ்டார் நடிகர்கள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மாற வேண்டும் ரசிகர்களுடைய நட்சத்திரங்கள் அனைவரும் அவர்களுக்கு உண்டான அந்த ஸ்டார் மாஸ் விஷயங்களை தாண்டி இறங்கி நடிக்கும் படங்களை எல்லாம் திரையரங்குகளில் பார்க்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இதுதான் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவதற்கு உண்டான முக்கிய காரணமாக இருக்கும்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அந்த முழு வீடியோ இதோ…