தனக்கென தனி ஸ்டைலில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் குமார் முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் அடுத்த AK62 படத்தில் இணையவுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அஜித்குமார் நடிப்பில் தயாராகியுள்ள அடுத்த ஆக்சன் பிளாக் திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் துணிவு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதி துணிவு தினம் என அறிவித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் நாளை டிசம்பர் 30ஆம் தேதி பிரம்மாண்டமான அறிவிப்பு ரசிகர்களுக்காக காத்திருப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே இந்த அறிவிப்பு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Sit tight, this is going to be big 😎 stay tuned to @zeestudiossouth 🙌#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/YGVYdYfOS6

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) December 29, 2022