தனக்கே உரித்தான ஸ்டைல் ரசிகர்கள் விரும்பும் விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கத்தில் வரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதற்குக் காரணம் LCU.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 67 திரைப்படம் இந்த LCUல் இருக்குமா என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இந்த LCUக்கு ஒரு முடிவு இருக்க வேண்டும் என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பேசியுள்ளார்.

நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

“எனக்கு கொடுத்து இருக்கும் இடம் பெரியது. இந்த LCU எல்லாம் பேசும்போதும் பார்க்கும் போதும்… நான் சோசியல் மீடியாக்களில் இல்லை ஆனாலும் என்னுடைய உதவி இயக்குனர்கள் காட்டுவார்கள். தற்போது LCUக்கு ஒரு டிசைன் செய்யலாம் என பார்க்க வேண்டுமென்றால் அது FAN MADEல் விருந்து தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அதை மிகவும் ஆர்வமாக அவர்களே செய்கிறார்கள். எனவே அந்த இடம் பெரியது. இதெல்லாம் மிகவும் நேர்மையாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என செய்ததுதான். அதை தொடர போகிறேன் எப்போது அது சரிவரவில்லையோ அப்போது கிளம்பி விட வேண்டியது தான்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஏன் நீங்கள் LCU இல்லாத படங்கள் பண்ணக்கூடாது எனக் கேட்டபோது, “இதற்கு ஒரு முடிவு வேண்டுமல்லவா இந்த யுனிவர்ஸை முதலில் முடித்துவிட்டு மற்றதை பார்க்கலாம். நாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என ஒரு விஷயத்தை செய்து விடுகிறோம். அதற்கு இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என தெரிந்த பிறகு இதை எங்கே கொண்டு செல்வது எங்கே முடிப்பது... இப்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு பண்ணுவது போலவே விக்ரம், டில்லி எல்லாமே பண்ணலாம். ஒரு சிறிய பட்ஜெட்டில் நெப்போலியன் கதாபாத்திரம் மரியம் ஜார்ஜ் அவர்கள் நடித்த கைதி படத்தின் கதாபாத்திரமான நெப்போலியன் வைத்து ஒரு படம் பண்ண முடியும். அந்த உற்சாகம் தான் இன்னும் இழுத்து செல்கிறது அதுதான் இன்னும் சவாலாகவும் அமைகிறது.” என தெரிவித்துள்ளார். 

எனவே இந்த LCUவை முடித்துவிட்டு மற்றதற்கு நகர வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தற்போது தெரிவித்துள்ளதால் தளபதி 67 திரைப்படம் LCUல் இருப்பதாக தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாட்டா ப்ளஸ் தமிழ் சினிமா ROUND TABLE 2022 முழு வீடியோ இதோ…