வேகமெடுக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்... மாஸாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்!

இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு ஹெலிகாப்டரில் வந்த கமல்ஹாசன்,kamal haasan arrives at indian 2 shooting spot by helicopter | Galatta

இந்திய சினிமாவில் காட்ஃபாதராக விளங்கும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவருமான இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பில் பணியாற்றுவது குறித்து ஆத்மார்த்தமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில்,
 
இந்தியன் திரைப்பட படப்பிடிப்பில் பார்த்த அதே மனிதராகவே இருக்கிறார். இயக்குநர் இருக்கையிலிருந்து கேமராவை நோக்கி, நடிகர்களை நோக்கி, துணை நடிகர்களின் ஒழுங்கை சரி செய்ய ஆயிரம் முறை காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடி ஓடி தீராதக் காட்சி ஓவியங்களை வரைந்தவண்ணம் இருக்கிறார். காட்சி எழுதப்பட்ட அந்த எழுதட்டையில் அந்த காட்சிக்கான கேமராக் கோணங்கள் பென்சிலால் ஒரு தொழிற்நுட்ப பொறியாளரின் வரைக்கோட்டு சித்திரம் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுக்கவே வெயில்,புழுதி,நெருப்பு,புகை, உணவு குடிநீர் என எதையும் கண்டு கொள்ளாது ஒரு வெறி கொண்ட சிங்கம் போல படப்பிடிப்புத் தளத்தில் ஆங்காங்கே உறுமியபடி திரிகிறார். சிங்கத்தின் அசைவுகளை அருகே இருந்து ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது. பொன் தருணம். அவர் கண்களில் இன்று புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் ஆர்வமும் மினுமினுப்பும் ஆச்சரியமும் சிரிப்பும் கலந்திருக்கிறது. அவரின் வெற்றியின் ரகசியம் அது தானோ....ஒரு காட்சித்துணுக்கு நன்றாக வரும் போது மைக்கில் படப்பிடிப்பு தளத்தில் நடித்த அனைவரையும் பாராட்டுகிறார்...அரங்கம் கைதட்டி அதிர்கிறது...மாஸ்டர் பாராட்டும் போது அதை விட ஆடுகளத்திற்கு வேறு என்ன பேரானந்தம். சூரியன் வேறு ஆடை பூண்டு மாலையை மணக்கும் போது மீண்டும் கேப்டனின் குரல் இன்றைய நாளின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என கூறும்குரல் இன்றைய நாளின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என கூறும் போது படப்பிடிப்பு தளமெங்கும் சோர்வு மறைந்து நேர்மறை எண்ணங்கள் மின்மினி பூச்சி போல திசையெங்கும் ஒளிவெள்ளமாய் பரவுகிறது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கூடடைந்த பிறகும் படப்பிடிப்பு தளத்தில் அடுத்த நாள் காட்சிக்கான தயாரிப்பு வேலைகளை ஒரு உருவம் தனி ஒருவனாய் செய்தவண்ணம் இருக்கிறது.இரவு நீள்கிறது. இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநராக இருப்பதற்காக அத்தனை தன்மைகளையும் பெருமைகளையும் திறமைகளையும் தன்னுள் கொண்ட இயக்குநர் Shankar தான் அவர்.

என பதிவிட்டுள்ளார். 

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி அருகே உள்ள கண்டிக்கோட்டா பகுதியில் நடைபெறுகிறது. படப்பிடிப்பிற்காக உலகநாயகன் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதியில் இருந்து கண்டிகோட்டா சென்று இறங்கியுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலகநாயகன் கமல்ஹாசனின் புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!
சினிமா

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!
சினிமா

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!
சினிமா

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!