நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!

நடிகை இலியானா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி,actress ileana d cruz hospitalised and current health statement | Galatta

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கிய இலியானா டி'க்ருஸ் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்த நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இலியானா அதன் பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தினார். அந்த வகையில் பாலிவுடில் இலியான நடித்துள்ள அன்ஃபேர் அண்ட் லவ்லி என்னும் ஹிந்தி திரைப்படம் நிறையவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே தற்போது நடிகை இலியானா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். FOOD POISON காரணமாக பாதிக்கப்பட்ட நடிகை இலியானா வயிறு அல்லது குடல் சார்ந்த சிறு பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இருப்பினும் என்ன தொந்தரவு என இலியானா அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இலியானாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விசாரித்து வருவதை பார்த்தும் தனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலம் விசாரிப்பவர்கள் அனைவருக்கும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கும் வகையிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது புகைப்படங்களோடு, “அனைவரின் அன்பிற்கும் நன்றி” தெரிவித்து இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் இதோ…
shruti haasan reply on lokesh kanagaraj thalapathy 67 tweet creates new buzz

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ
சினிமா

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ

போட்றா வெடிய... ஆவலோடு காத்திருந்த விஜய்-லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட அட்டகாசமான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

போட்றா வெடிய... ஆவலோடு காத்திருந்த விஜய்-லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட அட்டகாசமான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!