தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!

தளபதி 67-ல் உலக நாயகன் கமல்ஹாசன் இணைவதாக எதிர்பார்ப்பு,shruti haasan reply on lokesh kanagaraj thalapathy 67 tweet creates new buzz | Galatta

தனக்கென தனி பாணியில் பக்க ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் தற்போது குறிப்பிடப்படும் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்குகிறது. அதற்காக தற்போது படக்குழுவினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக தயாராகும் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகள் (நாளை முதல்) பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளிவர உள்ளன.

இதனிடையே நேற்று (ஜனவரி 30) தளபதி 67 திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜயுடன் இருக்கும் மாஸான புகைப்படத்தோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இந்த பதிவிற்கு நடிகையும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் அவர்கள் "🔥" என ரிப்ளை செய்திருப்பதால் உலகநாயகன் கமல்ஹாசன் தளபதி 67 திரைப்படத்தில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது.

முன்னதாக விக்ரம் திரைப்படத்திலிருந்து LCU என ஒரு யுனிவர்ஸ் திறந்திருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படமும் இந்த யுனிவர்சில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனும் இதில் இணையும் பட்சத்தில் ஏஜென்ட் விக்ரம் கதாபாத்திரத்தில் மீண்டும் கமல்ஹாசன் மிரட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது குறித்த நம்ம தகுந்த தகவல்கள் பின்வரும் அறிவிப்புகளின் அடிப்படையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
bigil michael rayappan is the inspiration for michael movie title sandeep kishan

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ
சினிமா

தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ

போட்றா வெடிய... ஆவலோடு காத்திருந்த விஜய்-லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட அட்டகாசமான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

போட்றா வெடிய... ஆவலோடு காத்திருந்த விஜய்-லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட அட்டகாசமான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சிலம்பரசன்TR-கௌதம் கார்த்திக்கின் அதிரடியான பத்து தல... முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

சிலம்பரசன்TR-கௌதம் கார்த்திக்கின் அதிரடியான பத்து தல... முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!