தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜான் கொக்கன் ஆரம்பத்தில் தென்னிந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின்னர் SS.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்தார்.

தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான திரைப்படமாக வெளிவந்து மெகா ஹிட்டான கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஜான் கொக்கன், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து மிகப் பிரபலமடைந்தார்.

அடுத்ததாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஜான் கொக்கன், தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனை ,ஜான் கொக்கின் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜான் கொக்கன் விரைவில் பெற்றோர்களாக இருப்பதை "குட்டி அதிசயம் வரவிருக்கிறது" என தெரிவித்து கர்பமாக இருக்கும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதவிட்டுள்ளார். அந்தப் பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)