வலிமை திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் அடுத்தடுத்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் துணிவு படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகை மமதி சாரி நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேகப்பேட்டையில் துணிவு திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக துணிவு திரைப்படத்தில் கதையை முன்னெடுத்து செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக தெரிவித்திருந்த நடிகை மமதியிடம், படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து நடித்துள்ளீர்களா அந்த அனுபவம் எப்படி இருந்தது..? என கேட்டதற்கு, “அவருடன் இணைந்திருக்கும் காட்சி இருக்கிறது ஆனால் அவருடன் இணைந்து நடிக்கவில்லை” என பதிலளித்துள்ளார். நடிகை மமதி சாரியின் முழு பேட்டி இதோ…