நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. 

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் பக்கா என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ரிப்பீட் மோடில் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட DELETED SCENE வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கலகலப்பான அந்த வீடியோ இதோ…