ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..

தளபதி 67 படத்திற்காக நடிகர் அர்ஜுன் புதிய லுக் - Action King Arjun new look for thalapathy 67 | Galatta

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 67’ திரைப்படம். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 67 மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் திரைப்படம் LCU என்ற பிரிவை உருவாக்கி அதில் பல நட்சத்திரங்களையும் அவரது கதைகளையும் இணைத்தார். ஏற்கனவே LCU பிரிவில் உலகநாயகன் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, ஃபகத் ஃபாஸில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதனையடுத்து விஜய் நடித்து வரும் தளபதி 67 படமும் LCU வில் உருவாகவுள்ளதால் விஜயும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.

இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. தளபதி நடித்து வரும் இப்படத்தில் தற்போது திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்களை இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அனிரூத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய் லோகேஷ் கனகராஜ் அனிருத் இணையும் இரண்டாவது படம் இது என்பதால் நிச்சயம் கமர்ஷியலாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இணையத்தில் நடிகர் அர்ஜுன் அவர் வெட்டருவா மீசையுடன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த கெட்அப் தளபதி 67 க்காக அர்ஜுனின் கதாபத்திர தோற்றம் என்று ரசிகர்கள் அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

dhanush and captain miller team pay last respect to stunt master judo raththinamநடிகர் அர்ஜுன் பல ஆண்டு காலமாக திரையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர். சமீப காலமாக அர்ஜுன் முக்கிய குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி அர்ஜுன் முன்னதாக அஜித்துடன் இணைந்து ‘மங்காத்தா’ , மணிரத்தினம் இயக்கத்தில் ‘கடல், விஷாலின் ‘இரும்புத்திரைபோன்ற பல முக்கிய படங்களில் நடித்து சமீப காலமாக  கவனிக்க தக்க நடிகராக இருந்து வருகிறார். மக்கள் மத்தியில் ஆக்ஷன் கிங் என்று புகழாரம் கொண்டவர், இவர் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் உலகத்தரத்தில் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். எந்தவொரு ஆக்ஷன் காட்சிகள் என்றாலும் அயர்ச்சியடையாமல் செய்து முடிப்பதால் ரசிகர்களுக்கு அவர் இன்னும் பிடித்த நடிகராகவே இருந்து வருகிறார். இவர் தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளியான அர்ஜுன் புது தோற்றம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..
சினிமா

எதிர்பார்ப்பை தூண்டும் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – வைரலாகி வரும் பிரபலத்தின் பதிவு..

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..
சினிமா

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..

சினிமா

"வம்சி சார் துணிவு பாத்தாச்சா..?" - ரசிகர் கேள்விக்கு பதிலளித்த வாரிசு பட இயக்குனர் வம்சி.. முழு வீடியோ இதோ..