மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷன். தொடர்ந்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாரான ஜானு படத்திலும் நடித்தார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் கௌரி கிஷன் நடித்துவருகிறார்.

குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் ஆகிய படங்களில் நடித்த கௌரி கிஷன் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ்ஸான புத்தம் புது காலை விடியாதா வெப் சீரிஸில் முகக்கவசம் முத்தம் எனும் எபிசோடில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து ஆசியாவிலேயே முதல் பிளவு திரை படமாக (SPLIT SCREEN MOVIE) தமிழில் உருவாகியுள்ள பிகினிங் (BEGINNING) திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பிகினிங் திரைப்படத்தை ஜெகன் விஜயா எழுதி இயக்கியுள்ளார்.

வீரக்குமார் ஒளிப்பதிவில் சுந்தரமூர்த்தி பின்னணி இசை அமைத்துள்ள பிகினிங் (BEGINNING) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள பிகினிங் (BEGINNING) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.