நிவின் பாலி-ராம் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
By | Galatta | February 22, 2022 20:23 PM IST
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் நிவின் பாலி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது.
அடுத்ததாக நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் துறமுகம் மற்றும் மஹாவீரயர் ஆகிய திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மலையாளத்தில் படவெட்டு படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிவின் பாலி தமிழிலும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வழக்கம்போல் இயக்குனர் ராமின் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தற்போது புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்டன்ட் இயக்குனர் சில்வா, இயக்குனர் ராம் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இருக்கும் அந்த புகைப்படம் இதோ...
Production no7 #vhouseproduction @NivinOfficial @sooriofficial pic.twitter.com/LJyk2KoVXz
— sureshkamatchi (@sureshkamatchi) February 22, 2022