தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டான நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நல்ல காமெடியனாக மகிழ்வித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் சந்தானம் #SANTA15 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் #SANTA15 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான காமெடி ஸ்பை த்ரில்லர் படமான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இதனிடையே மேயாதமான் & ஆடை ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குலுகுலு. சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி நலுல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குலுகுலு திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. அந்த Sneak Peek வீடியோ இதோ…