தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் ரசிகர்களை மிக அதிகளவில் கவர்ந்த படங்களில் ஒன்று சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார் என்று கூறுவதை விட சச்சின் எனும் பாத்திரத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்திருப்பார். 2005-ம் ஆண்டு வெளியான இந்த படம் எப்போதும் தளபதி ரசிகர்களின் ஃபேவரைட்டான படமாக இருக்கும். 

தெறிக்க தெறிக்க மாஸ் வசனங்கள் என்று ஏதும் இல்லாமல், கூலான கிளாஸான செகண்ட் ஹான்ட் புல்லட் அல்லது சைக்கிளில் வலம் வந்திருப்பார் நம் தளபதி. இதயத்திற்கு இனிமை சேர்க்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் ஒரு புறம், மலையரசியின் மனம் மயக்கும் லொகேஷன் மறுபுறம் என விழிகளுக்கு விருந்தளித்திருப்பார் ஜான். கல்லூரி ட்ரீம் கேர்ள் ஷாலுமாவாக ஜெனிலியா, கொஞ்ச நேரம் திரையில் வந்தாலும் இதயங்களை திருடிச் செல்லும் பிபாஷா பாசு என படத்தின் கேரக்டர்கள் ஏராளம். அட நம்ம ஐய்யாச்சாமி எனும் ரோலில் வைகைப்புயல் வடிவேலு, தாடி பாலாஜி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கண்மூடி திறக்கும் போது பாடல் காட்சியின் லொகேஷன் புகைப்படத்தை இயக்குனர் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு... இந்த இடத்தை கண்டுபிடிக்க முடியுமா ? என்ற கேள்வியை முன்வைத்தார். அடுத்த நொடியே, அந்த பாடல் காட்சியின் ஸ்னாப்பை கமெண்டில் பகிர்ந்து அசத்தினார்கள் தளபதி ரசிகர்கள். ஜான் மகேந்திரன் எங்கு சென்றாலும், எந்த பேட்டியளித்தாலும் அவரிடம் அனைவரும் கேட்கும் கேள்வி......சச்சின் 2 எப்போ ? என்பது தான். தளபதியை மீண்டும் அப்படி ஒரு ரோலில் பார்க்க ஆசையாக உள்ளனர் அவரது ரசிகர்கள். செய்தி சேனல்களை ஆன் செய்தாலே கொரோனா, அல்லது பிரபலம் மரணம் என்று தொடர்ச்சியாக துக்க செய்தி வந்து கொண்டிருக்கும் இந்த 2020 சூழலில் சச்சின் பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குனர் ஜான் மகேந்திரனுக்கு எண்ணற்ற நன்றிகள். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து தயாராக இருக்கும் படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து முடிந்தது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்தனர். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கலாம் என்று கூறப்படுகிறது. சென்ற லாக்டவுனில் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார் தளபதி விஜய். இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி இணையத்தை பசுமையாக்கி வைரலானது.