மறக்க முடியாத நாள்… பெற்றோர்கள் ஆகப்போகும் அட்லீ-பிரியாவின் வீட்டு விசேஷம்-ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்!

அட்லீ-பிரியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்,director atlee and priya new pregnancy photoshoot photos | Galatta

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனராக ரசிகர்கள் விரும்பும் பல பிரமாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது திரைப்பயணத்தை தொடங்கி ஆர்யா மற்றும் நயன்தாரா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் அட்லீ.

தொடர்ந்து தனது 2வது திரைப்படத்திலேயே தளபதி விஜயுடன், இயக்குனர் அட்லீ கைகோர்த்தார். தளபதி விஜய் - அட்லீ கூட்டணியின் முதல் படமாக வெளிவந்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த அட்லி தற்போது பாலிவுட்டிலும் இயக்குனராக களமிறங்கியுள்ளார். 

பாலிவுட்டில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ஜவான் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லீ காதல் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் விரைவில் பெற்றோர்கள் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், தங்களது இந்த கர்ப்ப காலத்தை அழகிய நினைவுகளாக்கும் இயக்குனர் அட்லி மற்றும் பிரியாவின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “நம் வாழ்வில் மறக்க முடியாத நாள்… இந்த நாளை ஸ்பெஷல் ஆக்கிய ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி!” எனக் குறிப்பிட்டு ப்ரீயா அட்லீ இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Priya Mohan (@priyaatlee)

முற்றிலும் புதிய பரிமாணத்தில் யோகி பாபு - பா.ரஞ்சித்துடன் இணைந்த புதிய படத்தின் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

முற்றிலும் புதிய பரிமாணத்தில் யோகி பாபு - பா.ரஞ்சித்துடன் இணைந்த புதிய படத்தின் அட்டகாசமான GLIMPSE இதோ!

சினிமா

"வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜய் தான்"- பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் வாரிசு! வேற லெவல் அறிவிப்பு இதோ

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!