பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்,dhanush in captain miller movie shooting spot photo shared by priyanka arulmohan | Galatta

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களின் ஒருவராகவும் இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் தனுஷ் தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இதனையடுத்து தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பர் 28ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்சமயம் குற்றாலத்தில் கேப்டன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தனுஷ் தற்போது இணைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. 

இந்நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு, படப்பிடிப்பில் இருப்பதை உறுதி செய்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் பகிர்ந்த அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
pa ranjith yogi babu in bommai nayagi movie kadar kara kaathu song out now

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு
சினிமா

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ
சினிமா

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ