ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து அட்லீ பதிவு,director atlee about shah rukh khan hard work in jawan movie | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக வளர்ந்து தற்போது இந்திய அளவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது படத்திலேயே ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜய் உடன் இணைந்தார். 

தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் விஜய் - அட்லீ கூட்டணிகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இந்த வரிசையில் அடுத்ததாக தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் இணைந்துள்ள இயக்குனர் அட்லீ தனது முதல் ஹிந்தி திரைப்படமாக ஜவான் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷாருக்கான் இயக்குனர் அட்லீ குறித்து கேட்ட போது,

“அவர் ஒரு மாஸ் இயக்குனர் மற்றும் மிகவும் கடினமாக உழைப்பவர் அவரும் அவருடைய மனைவியும் மிகவும் அன்பானவர்கள்…” என தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிலுக்கு பதிவிட்டிருந்த இயக்குனர் அட்லீ, “சார் லவ் யூ சார்… கடின உழைப்பு என்று வரும்போது அதில் நீங்கள் தான் கிங்! ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மிகவும் மதிக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் கொடுக்கும் உங்களது கடின உழைப்பு ஈடு இணையற்றது. உங்களுக்கு நெருக்கமாக இருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். பதான் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை CHEIFFFF❤” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் அட்லீயின் அந்தப் பதிவு இதோ…
 

Sir love you sir
Wen it comes to hard work ur the king in it sir , u respect audience and fans more than anything , so the hard work u put in each film is unmatchable
I am blessed to have seen that closely sir , can’t wait to watch Pathan chieffffffff ❤️ https://t.co/OxLNiY5eiT

— atlee (@Atlee_dir) January 21, 2023

சினிமா

"வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜய் தான்"- பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் வாரிசு! வேற லெவல் அறிவிப்பு இதோ

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அசத்தலான அடுத்த ரிலீஸ்... பிக் பாஸ் கவினின் டாடா பட ரகளையான புது GLIMPSE வீடியோ இதோ!

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு
சினிமா

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு