சிலம்பரசன்TRன் பக்கா மாஸான பத்து தல… பாடல்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு இதோ!

பத்து தல இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது,silambarasan tr gauthm karthik in pathu thala music rights bagged by sony music | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் மிகச் சிறப்பாக நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து துணிந்தது காடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருக்கிறார். இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. 

பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்தை PEN ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அறிவிப்பு வீடியோ ஒன்றும் வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..
சினிமா

Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..
சினிமா

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..