இரண்டாவது வாரத்தில் ஆட்ட நாயகன் ஆடும் ஆட்டம் – விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

ஐக்கிய இராஜ்யத்தில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது வார வசூல் நிலவரம் - UK second week collection report of varisu | Galatta

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11 அன்று வெளியான தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் உலகெங்கிலும் வசூல் ரீதியாக சாதனை பெற்று வருகிறது. கலவையான விமரசனத்தை பெற்றாலும் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு திரைப்படம் வெளியாக இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையிலும் ரசிகர்களின் பேராதரவோடு குறையாமல் பல இடங்களில் கோலாகலமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்திய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்கள்.இதில் வெளிநாடு வாழ்  இந்திய மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நடிகரின் படங்களில் முக்கியமானவர் தளபதி விஜய். இவரது படங்கள் வெளியாகும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம்  பல நாடுகளில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியானது.

இரண்டு வாரங்களை கடந்த நிலையில் வெளிநாடு வினியோகஸ்த நிறுவனங்கள் தங்களது வசூல் நிலவரங்களை அறிவித்த நிலையில் உள்ளது இந்நிலையில் ஐக்கிய ராஜ்ஜிய பகுதிகளில் பல திரையரங்குகளில் விநியோகம் செய்த அஹிம்சா என்டர்டெயின்மன்ட் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது வாரத்திற்கான வசூல் நிலவரத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

#ThalapathyVijay’s unmatched craze continues as #Varisu make waves at the UK box office, earning over £805k in its second week of release. It is now the 3rd highest grossing Tamil film of all time (behind ‘PS1’ & ‘Vikram’). Ella edamum namma records dhan! 🔥🙌😏 pic.twitter.com/RkkmkXB8Ht

— Ahimsa Entertainment (@ahimsafilms) January 22, 2023

அதில் வாரிசு திரைப்படம் இரண்டு வாரங்களில் £805kபவுண்டுகளை வசூலித்துள்ளது. மேலும் ஐக்கிய ராஜ்யத்தில் அதிக வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படங்களில்  மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது  விஜயின் வாரிசு திரைப்படம். முதல் இடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் இரண்டாவது இடத்தில் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் அஹிம்சா என்டர்டெயின்மன்ட் பதிவினை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் வாரிசுப் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு முன்னதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் பாடல்கள் தமன் இசையில் பட்டி தொட்டியெங்கும் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெய சுதா, பிரபு, ஷ்யாம்,சங்கீதா,சம்யுக்தா, பிரகாஷ்ராஜ் சதீஷ், விடி வி கணேஷ், உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே எல்லா சென்டர்களிலும் வசூலில் முன்னிலை வகிக்கும் 210 கோடியை தொட்டுள்ள வாரிசு திரைப்படம் விரைவில் 300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் மார்க் ஆண்டனியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெயிலர் பட நடிகர்  - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

விஷாலின் மார்க் ஆண்டனியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெயிலர் பட நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

கேரளா.. காஷ்மீர்.. அடுத்து எங்கே.. - தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்.. வீடியோ உள்ளே..
சினிமா

கேரளா.. காஷ்மீர்.. அடுத்து எங்கே.. - தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்.. வீடியோ உள்ளே..

விரைவில் காந்தாரா இரண்டாம் பாகம்.. கதை இதுதான்! – உறுதிசெய்த படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

விரைவில் காந்தாரா இரண்டாம் பாகம்.. கதை இதுதான்! – உறுதிசெய்த படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள்