தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷ் தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.Netflix தயாரிப்பில் உருவாகும் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இந்த படத்தினை avengers படத்தினை இயக்கிய Russo Brothers இயக்குகின்றனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் Chris Evans,Ryan Gosling உள்ளிட்ட பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தி கிரே மேன் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக Netflix-ல் வெளியாகவுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்.அப்போது தனுஷ் எப்படி இந்த படத்தில் இணைந்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நான் எப்படி இந்த படத்திற்குள் வந்தேன் என எனக்கே தெரியவில்லை , என நகைச்சுவையாக தெரிவித்தார்.இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய வாய்ப்பு.படத்தினை பற்றி இப்போது பெரிதாக கூறமுடியாது.புதிதாக கற்றுக்கொள்ள முயற்சி செய்ய மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன்,படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.