கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.அம்மன்,இதயத்தை திருடாதே, போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மன்.

பவித்ரா கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.அமல்ஜித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.சுபா ரக்ஷா,ஆனந்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வந்தனர்.இந்த தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் 1100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது.

மூன்று சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் மிக விரைவில் நிறைவடையவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென நிறைவடையவுள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.