இந்திய திரையுலகில் நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அந்த வகையில் தற்போது அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களாக தயாராகும் ரேக்ளா மற்றும் முஸாசிர் ஆகிய படங்களில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக  இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை , இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா & ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் ஃபிளாஷ்பேக் திரைப்படமும் தயாராகி வரும் நிலையில் மீண்டும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் மை டியர் பூதம். பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் மாஸ்டர் அஸ்வந்த் இணைந்து நடித்துள்ளனர்.   

குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டசி காமெடி திரைப்படமாக இயக்குனர் N.ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைக்க U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மை டியர் பூதம் திரைப்படத்தில் இருந்து எனக்கு மட்டும் ஏன் ஏன் பாடல் வெளியானது. அந்த பாடல் இதோ…