தங்களது வித்தியாசமான தொடர்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக உருவெடுத்துள்ளது கலர்ஸ் தமிழ்.வெகு விரைவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 எபிசோடுகளை கடந்த பல தொடர்களை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பெரிய சூப்பர்ஹிட் தொடர்களையும் பல நட்சத்திரங்களையும் இந்த தொலைக்காட்சி உருவாக்கியுள்ளது.அவ்வப்போது சில புது சீரியல்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பி வருகின்றனர்.

அப்படி கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் பச்சக்கிளி.இந்த தொடரில் விஜய் டிவியின் அரண்மனை கிளி,நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களில் நடித்து பிரபலமான மோனிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.இவரை தொடர்ந்து தற்போது மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் இந்த தொடரில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது.

விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து அசத்தி வரும் ஸ்டாலின்,இந்த தொடரில் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை புது ப்ரோமோவுடன் தெரிவித்துள்ளனர்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புது சீரியலின் ஒளிபரப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.