பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக ஹன்சிகாவின் 50வது படமாக தயாராகி இருக்கும் மஹா திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

தொடர்ந்து சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், தெலுங்கில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி, ஹன்சிகா மற்றும் நடிகர் ஆதி இணைந்து நடித்திருக்கும் பாட்னர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் உருவாகும் ரவுடிபேபி திரைப்படத்திலும், இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைப்படத்திலும் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் & சங்கத்தமிழன் ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் சந்தர், தனது ஃபிலிம் வொர்கஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படமாக  உருவாகும் புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஃபேண்டசி படமாக தயாராகும் இந்த புதிய திரைப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

And it’s a wrap ☺️☺️☺️☺️thank you vijay and team. #comingsoon 👍🏻😃@vijayfilmaker's #ProductionNo1 @FilmWorksOffl @gurusaravanan @sabari_gireesn @shakthi_dop @Gopaljames1 @samCSmusic @RIAZtheboss pic.twitter.com/yHPVWdotxP

— Hansika (@ihansika) June 14, 2022