நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியே 5 நாட்கள் பலாத்காரம்! நண்பனுடன் கணவனும் கைது.. ஏன் தெரியுமா?

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியே 5 நாட்கள் பலாத்காரம்! நண்பனுடன் கணவனும் கைது.. ஏன் தெரியுமா? - Daily news

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியே 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், 14 வயது சிறுமியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த கணவனும் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளான்.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆனால், இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதாவது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 24 வயதான காலித் ஹாசன், அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து, அவரை தனது காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.

அந்த 14 வயது சிறுமி  மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கு சென்ற நிலையில் தான், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, காலித் ஹாசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு, அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல், “எங்கு சென்று வாழ்க்கையை நடத்துவது?” என்று, யோசித்த நிலையில், தனது கூட்டாளியான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 28 வயதான தபரூக் ஹுசேன், தற்போது சென்னை குரோம்பேட்டை துர்கா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வருவது நினைவுக்கு வந்து, அவரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறான்.

அவனும், “சென்னைக்கு வரவழைத்த நிலையில்” அதன்படியே அவனும் தனது 14 வயது மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறான். 

இதனையடுத்து, சென்னையில் ஒரே வீட்டில் இளம் தம்பதியும், அவரது நண்பரும் ஒன்றாக தங்கி உள்ளனர். அதன் பிறகு, கூட்டாளிகளான இருவரும் கட்டிட வேலைக்காக வேலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் “எனக்கு உடல் நிலை சரியில்லை” என்று கூறிவிட்டு, தபரூக் ஹுசேன் வீட்டில் இருந்து உள்ளார். இதனால், அந்த 14 வயது சிறுமியின் கணவன் மட்டும் வேலைக்கு சென்றிருக்கிறான்.

அப்பொழுது, கணவன் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த அந்த 14 வயது சிறுமி, குளித்துக்கொண்டிருப்பதை, அங்கு இருந்த  தபரூக் ஹுசேன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளான்.

பின்னர், அந்த ஆபாச வீடியோவை வைத்துக்கொண்டு, தபரூக் ஹுசேன் அந்த சிறுமியை மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறான். இப்படியாக, கடந்த 5 நாட்களாக அந்த சிறுமியுடன் தபரூக் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கிறான்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, இது குறித்து தனது கணவரிடம் கூறி அழுத நிலையில், உடனடியாக அவனும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளான்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தபரூக் ஹுசேன் கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பான விசாரணையில், காலித் ஹாசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இற்த 14 வது வயது சிறுமியை ஏமாற்றி காதலித்து 2 வதாக கல்யாணம் செய்துகொண்டு, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த கூட்டாளியுடன் சேர்த்து, அந்த சிறுமியின் கணவனையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Leave a Comment