மலேசிய வாழ் தமிழராக பல தமிழ் சுயாதீன பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த முகென் ராவ் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழக ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார். இதனையடுத்து இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவான வேலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் முகென்.

தொடர்ந்து இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்திருக்கும் MY3 வெப் சீரிஸில் முகேன் ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த வரிசையில் அடுத்ததாக வெப்பம் திரைப்படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகென் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மதில் மேல் காதல். 

ஷீரடி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரொமான்டிக்கான காதல் படமாக தயாராகியுள்ள மதில் மேல் காதல் படத்தில் நடிகை திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, சுப்பு பஞ்சு, KPY பாலா, பாண்டிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள மதில் மேல் காதல் படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், மதில் மேல் காதல் திரைப்படத்தில் இருந்து முதலா வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரொமான்டிக்கான அந்த வீடியோ பாடல் இதோ…