தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வரிசையாக அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷால் இயக்கி நடிக்கவுள்ளார். 

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலுடன் இணைந்து நடிகர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து லத்தி திரைப்படத்தை தயாரிக்கின்றனர். பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சண்டை காட்சியில் நடித்து வந்த விஷால் காயமடைந்துள்ளார். முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போதும் விஷால் காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

"லத்தி" படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது காயமடைந்த விஷால்.

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் @VishalKOfficial 💐#Vishal #Laththi pic.twitter.com/Qlb0rNsoO7

— Galatta Media (@galattadotcom) July 4, 2022