சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய்,Ante Sundaraniki படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தயாராகும் தசரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sri Lakshmi Venkateswara Cinemas இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, விரைவில் ஷூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் மார்ச் 30 2023-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த படத்தின் முதல் பாடல் வரும் தசரா அக்டோபர் 5ஆம் தேதி அன்று ரிலீசாகும் என்று ஒரு ப்ரோமோவுடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்