தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு PAN INDIA படமாக இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிப்ருஷ் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரபாஸின் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாக தயாராகி வருகிறது.

கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே நடிகர் பிரபாஸ் தனது ரசிகர்கள் அனைவரையும் தனது சொந்த ஊரான மொகல்த்துருவில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்து பிரம்மாண்டமாக விருந்து கொடுத்துள்ளார். இதில் நடிகர் பிரபாஸை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரபாஸின் வீட்டை சூழ்ந்தனர். பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு அளித்த மெகா விருந்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#Prabhas greets & requests fans to have food from the Royal feast arranged at his home.#KrishnamRajuLivesOn#PrabhasAtMogalthuru pic.twitter.com/7zN07Ao5Nw

— Vamsi Kaka (@vamsikaka) September 29, 2022

#Mogalthuru welcomes #Prabhas and #KrishnamRaju gari family with utmost love and affection.

Emotional day for the whole family and the Mogaluthuru people.

Prabhas gets a royal welcome. #PrabhasAtMogalthuru pic.twitter.com/P7lrS2thmS

— Vamsi Kaka (@vamsikaka) September 29, 2022

#Prabhas at Mogalthuru greeting fans participated in #KrishnamRaju Gari memorial service
#KrishnamRajuLivesOn#PrabhasatMogalthuru pic.twitter.com/TVHJrL02Ay

— Vamsi Kaka (@vamsikaka) September 29, 2022