தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் பஇரபல கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி PAN INDIA படமாக பல மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

முன்னணி தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ள லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார்.

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்த லைகர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் நிறைய மோசமான எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. இதன் எதிரொலியாக சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தயாரிப்பாளர் சார்மி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதனிடையே மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2-வது முறையாக விஜய் தேவரகொண்டா நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஜனகணமன திரைப்படம் லைகர் படத்தின் தோல்வியின் காரணமாக கைவிடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் சார்மி தன் ட்விட்டர் பக்கத்தில் "இவை முழுக்க முழுக்க வதந்தியே" என்று தெரிவித்துள்ளார்.
 

Rumours rumours rumours!
All rumours are fake!
Just focusing on the progress of 𝐏𝐂 ..
Meanwhile, RIP rumours !!

— Charmme Kaur (@Charmmeofficial) September 8, 2022