எங்க State கேரளா ஆனோ....திருவோண தினத்தில் தேவதைகளாக மாறிய நடிகைகள் !
By Aravind Selvam | Galatta | September 08, 2022 18:42 PM IST
ஓணம் இந்தியாவில், குறிப்பாக தென்தமிழகத்திலும் , கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மலையாள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை முக்கிய நிகழ்வு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை, பத்து நாட்கள் கொண்டாடப்படும்.
எப்போதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு ஜாதி,மத வேறுபாடின்றி, கேரளா மக்களை தாண்டி பலரும் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.தமிழ் நாட்டிற்கும் கேரளாவிருக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.தமிழில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது இருந்து வரும் பலரும் கேரளத்தில் இருந்து தான் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருடாவருடம் ஓணம் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும் , கேரளா பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் கேரள சாரியில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.இந்த வருடமும் அப்படி பலரும் தங்கள் வாழ்த்துக்களையும்,புகைப்படங்களையும் அனைவருடனும் பகிர்ந்து வந்தனர்.
வழக்கம் போல கேரளா சாரியில் பல நடிகைகளும் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வர அனைவரது சமூகவலைத்தள டைம்லைனும் வண்ணக்கோலம் பெற்றுள்ளது.முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள்,சின்னத்திரை நடிகைகள்,யூடியூப் பிரபலங்கள் என பலரும் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் செம ட்ரெண்டிங்கில் இருக்கும்,நம் மனதை கொள்ளை கொண்ட சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இந்த வைரல் புகைப்படங்களை தற்போது காணலாம்
கீர்த்தி சுரேஷ்
கல்யாணி ப்ரியதர்ஷன்
அனுபமா பரமேஸ்வரன்
மாளவிகா மோஹனன்
நிகிலா விமல்
அபர்ணா பாலமுரளி
சம்யுக்தா மேனன்
அஞ்சு குரியன்
மஞ்சு வாரியர்
ஐஸ்வர்யா மேனன்
ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்
மிருணாளினி ரவி
கௌரி கிஷன்
அனிகா சுரேந்திரன்
மேகா ஆகாஷ்
ரம்யா நம்பீசன்
ப்ரியாமணி