தமிழ் தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராக திகழும் நடிகர் தனுஷ் இந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகராக வளர்ந்து, தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அந்தவகையில் ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த தி க்ரே மேன் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாத்தி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். இதனிடையே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 3 திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வெளிவந்த 3 திரைப்படத்தில் தான் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 3 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு தினங்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக 3 திரைப்படம் வெற்றி நடை போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

In a Major shock to almost everyone in the Trade, @dhanushkraja & @shrutihaasan’s #3Movie is reporting Housefuls at severe places today for its Re-release this Morning in AP & TS! Even the remaining shows bookings are Good for Today. @ash_rajinikanth @anirudhofficial pic.twitter.com/kuRQrdpMRk

— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) September 8, 2022