தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த குருதி ஆட்டம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து வரிசையாக அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்த நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

இந்த வரிசையில் அதர்வா நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ட்ரிக்கர். இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ட்ரிக்கர் படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ட்ரிக்கர் திரைப்படத்தை SP சினிமாஸ் வெளியிட வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ட்ரிக்கர் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

#Trigger - Triggered U/A
Excited to see you at the Big screens 💥
Theatrical Release on 23- Sep- 2022@pramodfilmsnew @miraclemoviesin @DesiboboPrateek @ShrutiNallappa @ANTONfilmmaker @actortanya @mynameisraahul @GhibranOfficial pic.twitter.com/MozPjyafU1

— Atharvaa (@Atharvaamurali) September 8, 2022