இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் 169-வது திரைப்படமாக தற்போது தயாராகி வருகிறது ஜெயிலர் திரைப்படம். கோலமாவு கோகிலா, டாக்டர் & பீஸ்ட் படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் மாஸான லுக்கில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்திருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் தரமணி மற்றும் ராக்கி படங்களில் நடித்த வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேட்ட & தர்பார் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் அறிவிப்பு தீம் மியூசிக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான ஜெயிலர் படத்தின் அந்த அறிவிப்பு தீம் மியூசிக் இதோ…
 

#JailerTheme music now streaming! 🔥

🎵 https://t.co/C3W5imlfDn@rajinikanth @anirudhofficial @Nelsondilpkumar #Jailer pic.twitter.com/fkExez3dg3

— Sun Pictures (@sunpictures) September 7, 2022