பிக்பாஸ் வீட்டில் நேற்று மாட்னீயா என்ற தலைப்பில் ஃபன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஒருவர் கையை நீட்டியிருக்க மற்றொருவர் அடிக்க வேண்டும். அடித்த நபர் அங்கிருக்கும் சீட்டில் எழுதியுள்ளதற்கு ஏற்ப கேள்வி கேட்பார். அதற்கு அடி வாங்கிய நபர் பதில் சொல்ல வேண்டும். இந்த டாஸ்க்கில் அனிதா முதல் ஆஜித் வரை அனைவருமே ஆரியை டார்க்கெட் செய்து கேள்வி கேட்டு பதில் கூறினர். பாலா அனிதாவிடம் இந்த வீட்டில் யார் தன்னை உயர்த்தியும் மற்றவர்களை மட்டப்படுத்தியும் விளையாடுகிறார் என்று கேட்டு ஆரியை பார்த்தார்.

ஏற்கனவே ஆரியுடன் நான்சிங்க்கில் இருந்த அனிதா ஆரிதான் என்று பதில் சொன்னார். கமல் எபிசோடில் அவரை நான் நரி என்று கூறியதால் என்னை மட்டப்படுத்தி வருகிறார் என்று கூறினார். அனிதா என்ற பதில் வரவேண்டும் என்பதற்காகதான் ரியோவிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்டார் என்றார். தொடர்ந்து வந்த ஆஜித்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆரியின் பெயரை சொல்லி, அவர் மீதுதான் அதிக புகார்கள் வருகிறது. அவர் விளையாடுறது எனக்கு பிடிக்கவில்லை, அவர் எல்லோருடைய குறையையும் சொல்கிறார் என்றார். இதேபோல் ஷிவானியும் ஆரி ஆடியன்ஸை பேட் இன்ஃபுளூயன்ஸ் செய்கிறார் என்றார்.

தொடர்ந்து வந்த ரம்யாவும் வேற லெவலில் விளையாடினார். யார் யாரையெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்று கேட்டதற்கு அனைத்து ஹவுஸ்மேட்ஸின் பெயரையும் கூறி கட்டாயமாக ஒரு போட்டியாளராக ஆரியின் பெயரை நாமினேட் செய்திருப்பார்கள் என்றார். மாட்னீயா டாஸ்கே ஆரியை குறித்து கொடுக்கப்பட்டது போன்று கேள்விகளுக்கும் பதில்களுக்கும் ஆரியின் பெயரை பயன்படுத்தினர் ஹவுஸ்மேட்ஸ். மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து ஆரியை டார்கெட் பண்ணுவதை பார்த்த ரசிகர்கள், ஆரிதான் வின்னராக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. B for Ball, C for Catch என அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இந்த டாஸ்கில் பங்கேற்றனர். இந்த டாஸ்க்கின் போதே ஆரிக்கும் ரியோவிற்கும் நடுவே பிரச்சனை கிளம்பியது. 

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சோம் சேகர் மற்றும் பாலாஜி இருவரும் அவர்களது கருத்தை முன்வைத்தனர். பந்தை யார் பிடிப்பது என்ற பஞ்சாயத்து ஒருபுறம் நடந்தாலும், எப்படி விளையாட வேண்டும் என்ற வாக்குவாதம் மறுபுறம் நடைபெற்று வருகிறது. கோட்டில் நீ நின்று கொண்டு என்னை குறை கூறாதே என்று பாலாஜி சொல்கிறார். 

ஒரு கட்டத்திற்கு பிறகு என்னடா இது...எதுக்கு விளையாடுறோம்னு தோணுது என நடந்த பிரச்சனை குறித்து ஆரியிடம் புலம்பி கொண்டிக்கிறார் பாலாஜி. இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அன்பு கேங் குண்டை போடுகிறார்களா ? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.