மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் , திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. "பாஜக தான் ஆட்சியை பிடிக்க போகிறது என பாஜக தலைவர்களில் பொதுக்கூட்டங்களில் தீர்க்கமாக சொல்லி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளம் சென்ற அமித் ஷா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து சில எம்.எல்.ஏக்கள், எம்.பிகள் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய அமித் ஷா , ‘’ தேர்தல் நேரத்தில் மம்தா மட்டும் தான் கட்சியில் இருப்பார். அனைவரும் பாஜகவில் இணைந்து விடுவார்கள்”என்று கூறி பரப்பரப்பை கிளம்பி இருந்தார். 


இந்நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்று வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. “  மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுத்தோல்வி அடைவது நிச்சயம்.  பாஜக பெறபோகும் வாக்குகள் இரட்டை இலக்கை தாண்டுவது சாத்தியமே இல்லை. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்.

இந்த ட்வீட்டை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை பாஜக இரட்டை இலக்கு வாக்குகளை பெற்றால் ட்வீட்டரை விலகுகிறேன்” என்று பிரசாந்த் கிஷோர் ட்வீட்டரில் பதிவுசெய்து இருக்கிறார்.