தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யானை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக அருண் விஜய் நடிப்பில் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் அக்னிசிறகுகள், பார்டர், பாக்ஸர் மற்றும் சீனம் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. இந்த வரிசையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

முன்னதாக அருண் விஜய் நடிப்பில் குற்றம் 23 மற்றும் பார்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜயுடன் இணைந்து வாணிபோஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லைவ் தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸுக்கு ராஜசேகர் ஒளிப்பதிவில்,V.J.சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்ய, விகாஸ் படிஸா இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அந்த ட்ரைலருக்கு கமெண்ட் செய்த ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அருண் விஜய் பேசும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

Honest replies FT. Arun Vijay🎯
Watch what Arun Vijay responded to some of the comments he received for the web-series #Tamilrockerz.#Tamilrockerz - A #SonyLIV Tamil web-series is streaming from Aug 19th.#TamilrockerzOnSonyLIV @arunvijayno1 @dirarivazhagan @avmproductions pic.twitter.com/K4fvG2IuGO

— SonyLIV (@SonyLIV) August 7, 2022